திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த முருகேஸ்வரி (88), என்பவர் கடந்த (07.09.2022),-ம் தேதி தனது வீட்டின் முன்பு அதிகாலை வாசல் தெளித்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதே போல் செம்பட்டி காவல் சரகம் சித்தையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரிடமிருந்து 1/2 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பறித்து சென்றனர்.
இவ்விரு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்டைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் சார்பு ஆய்வாளர் திரு. கண்ணாகாந்தி, தலைமையிலான நிலக்கோட்டை உட்கோட்ட தனிப்படையினர் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளான பிரபாத் (22), இடுக்கி, கேரளா, யாசின் (23), திருவனந்தபுரம், கேரளா, சுமித் மோகணன் (18), உப்புத்தரா, கேரளா ஆகியோர்களை ஒரு இருசக்கர வாகனத்துடன் சென்னையில் கைது செய்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
