திண்டுக்கல் : தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக சந்தித்து மனு அளிக்கும் குறைதீர்ப்பு முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தங்களது குறைகளை திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவில் இயங்கி வரும் பிரத்தியேக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9487593100) தங்களது புகார்களை அனுப்பியும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மேற்படி எண்ணிற்கு (9487593100) பொதுமக்கள் தங்களது புகார்களை வீடியோ கால் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (20.07.2020) காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மொத்தம் 21 நபர்கள் (4 பெண்கள் உட்பட) தங்களது புகார்களை வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். மேற்படி நபர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா