திண்டுக்கல் : 30.03.2020 தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள். காவல்துறையினர் நாள் முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு உத்தரவை நிலைநாட்டும் வகையில் வெயிலில் நின்று பணிபுரிவதால் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கு இக் குடிநீர் உதவும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா