திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலையம் சரகம் பாலாறு பொருந்தலாறு பகுதியில் இருந்து கடந்த 15.11.2019 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருவங்காடு கிராமத்தைசேர்ந்த மாயாண்டி மகன் அறிவழகன் என்பவருக்கு சொந்தமான திறந்த வெளி வாகனத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் கொடியரசு என்பவர் சுமார் 24 பயணிகளை ஏற்றிகொண்டு போடுவார் பட்டி கிராமத்திற்க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மேற்படி வாகனம் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதினால் 24 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் மற்றும் பழனி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு எதிரியான ஓட்டுநர் கொடியரசு என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பலமுறை திறந்த வெளி வாகனத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு காரணமாக இருந்தவாகன உரிமையாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பாணை மூலம் பழனி தாலுகா ஆய்வாளர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் இன்று 17.11.2019 ஆம் தேதி மேற்படி வாகன உரிமையாளர் அறிவழகன் கைது செய்யப்பட்டு பழனி கிளைச்சிறை சாலையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இனி வருங்காலங்களில் திறந்த வெளிவாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் அனைவருக்கும் நீதிபதி காவலுக்கு உட்படுத்தபட்டு சிறைக்கு அனுப்ப படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா