திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30.10.2020 அன்று அரசு விடுமுறை நாட்களை மீறி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 106 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1464 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
