திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் மதுவிலக்கு போலீசார் திணறி வருகின்றனர். மதுவிலக்கு போலீசாருக்கு உதவியாக லோக்கல் போலீசாரும் களத்தில் இறங்குமாறு எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவிட்டிருந்தார். ஆனால் லோக்கல் போலீசார் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தியும் மதுபாட்டில்கள் விற்பனையை ஒழிக்க முடியவில்லை . தொடர்ந்து விற்பனை நடந்து கொண்டே இருக்கிறது. போலீசார் இரண்டு பேரை பிடிப்பதும் ,பின்பு விடுதலை செய்வதுமானநிலைமை உள்ளது. போலீஸாரால் விடுதலை செய்யப்படுவார்கள் மீண்டும் மது பாட்டில்களை வாங்கி விற்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் இன்று வரை 104 பேர் மது விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2,500 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர். போலீசார் மதுபாட்டில்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.