திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் மிகவும் சிரமப்படுவது தொடர்பாகவும், சிரமப்படும் அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என பட்டிவீரன்பட்டி காவல்துறை அதிகாரிகளிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன், சார்பு ஆய்வாளர் திரு.கிருஷ்ணசாமி, SP தனிப்பிரிவு காவலர் சந்திரலிங்கம் ஆகியோர் கடுமையாக முயற்சி செய்து தங்களது எல்லைக்குட்பட்ட தேவரப்பன்பட்டி, சித்தரேவு, நெல்லூர், சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து நேற்று (27.04.2020) வழங்கினர்.
நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன், சார்பு ஆய்வாளர் திரு.கிருஷ்ணசாமி, SP தனிப்பிரிவு காவலர் சந்திரலிங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய தலைவர் வனிதா, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிவாரண பொருட்களை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பட்டிவீரன்பட்டி காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லம்பட்டியில் இயங்கிவரும் ஓசன்னா ஆதரவற்றோர் இல்லத்திற்கும், பட்டிவீரன்பட்டி கலைஞர் நகரில் உள்ள குட்வில் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பிஸ்கட் முதலிய பொருட்களை பட்டிவீரன்பட்டி காவல்துறை சார்பில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா