திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் புற வடக்கு காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர் முக்கிய பகுதிகளில் நகர வடக்கு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள்.திரு.மகேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சாந்தி அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலக உதவி ஆய்வாளர் திரு.திரவியம் அவர்களது தலைமையிலான காவலர்குழு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைகவசம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா ஆவிளிபட்டி ஊராட்சியில் சாணார்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்குணசேகர் தலைமையில் பொதுமக்களுக்கு திருட்டு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா