திண்டுக்கல் : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர், போலீசார் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்தவகையில் சுவரொட்டிகள் ஒட்டுதல், சுவர் விளம்பரம் செய்தல் , பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைத்தல் ,மற்றும் கட்சி கொடிகள் கட்டுதல் ,தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் பிரச்சாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட விதி மீறல்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா