திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீலபாடி ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிபடைப்பிரிவில் திண்டுக்கல் சரகர் காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி, இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் கொலை மற்றும் திருட்டு வழக்கில் சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் மோப்பநாய் படைப்பிரிவில் உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முருகன், தலைமை காவலர்கள் திரு.சுப்பிரமணி, திரு.சங்கர், திரு.மணிகண்ட பாபு, திரு.ராஜா சந்திரன், திரு.செல்வகுமார், ஆகியோர்களை திண்டுக்கல் சரக துணைத் தலைவர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். மேலும் மோப்ப நாய் படைப்பிரிவில் உள்ள பதிவேடுகள் மற்றும் மோப்ப நாய்களை பராமரிக்கும் விதம் அவைகளுக்கு அளிக்கப்படுகின்ற உணவு வகைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் உடன் இருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
