திண்டுக்கல்: திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு போன்கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடத்தியது வெள்ளை நிற கார் என்றும் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடியில் வெள்ளை நிற கார்களை மட்டும் போலீசார் சோதனையிட்டனர். போலீசார் வந்த அழைப்பின்படி கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. போலீசை அழிக்க வந்த போன் கால் என தெரிந்தது. இதேபோன்று ஏற்கனவே அபிராமி அம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு மிட்டல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா