திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா தங்கும் விடுதியில் மர்மமான முறையில் மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,45, என்பவர் மரணமடைந்தார். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.