திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி நிர்வாகி மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த பாலகுமார், திமுக சார்பிலும் சுவர் விளம்பரம் செய்த வார்டு துணைச் செயலாளர் தமிழரசு மீதும், திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும் திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ. ஜெயகணேஷ் வழக்கு பதிவு செய்துள்ளார் .