திண்டுக்கல்: திண்டுக்கல் கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த ராம்குமார் 43. இவர் திண்டுக்கல் – பழனி புறவழிச்சாலையில் சித்ரா கார் பார்க்கிங் செண்டர் நடத்தி வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சாலையில் உள்ள ராமன் கோ பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் அவரை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முன்பகை காரணமா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தினர்.தாய் சித்ரா புகாரில் மேற்கு போலீசார் விசாரணையில், திண்டுக்கல் கவடகாரத்தெரு மணிகண்டன் 29, பாலகிருஷ்ணாபுரம் சிவராஜா 34, ஆர்.வி., நகர் கோகுல் 21, குணசீலன் 23, சதிஷ்குமார் 22, மேற்கு அசோக் நகர் சசிகுமார் 22, ஒய்.எம்.ஆர்., பட்டி சஞ்சய் 22 ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில்,’ஏழுபேரும் ராம்குமாரோடு ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள்.பணம் பறிக்கும் எண்ணத்தில் அவரைமிரட்டியுள்ளனர்.அவர்பணம் தர மறுத்ததால், மது போதையில் இருந்தவர்கள் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியது’,தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா