வடமதுரை அருகே சரக்குவேன், எரிந்து நாசம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே மூணாண்டிபட்டி என்ற இடத்தில் பைப்புகளை ஏற்றி வந்த மினி சரக்கு வேன் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. டிரைவர் வண்டி ஓரமாக நிறுத்திவிட்டு தப்பினார். இது குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா வாகனம், கவிழ்ந்து விபத்து!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யனார் நகர் 5 வழிச்சாலையில், தேனி மாவட்டம் கம்பத்தில், இருந்து கொடுமுடி நோக்கி சென்ற சுற்றுலா வாகனம் பின்பக்க டயர் வெடித்ததில் நடுரோட்டில், கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம் இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி, வாலிபர் உயிரிழப்பு!
திண்டுக்கல் சீலப்பாடியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காமராஜர் நகரை சேர்ந்த சதாம் என்பவர் உயிரிழப்பு. இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை.
வாலிபர், நீரில் மூழ்கிபலி!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரில் உள்ள தங்கை ரஞ்சிதா வீட்டிற்கு வந்த பழனிச்சாமி என்ற ரமேஷ் (31), என்பவர் தோட்டத்தில் சொட்டுநீர் பாசனத்திற்காக கட்டி வைத்துள்ள தண்ணீர் தொட்டியில், குளிப்பதற்காக சென்ற ரமேஷ் நீச்சல் தெரியாத காரணத்தால், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
