போதைப்பொருள் வைத்திருந்த, 2 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, பேருந்து நிறுத்தம் அருகே திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த சுலைமான், செங்குளத்துப்பட்டியை சேர்ந்த முத்துவேல், இருவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 18000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 15,000 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து காவல் ஆய்வாளர் திரு. ஜோதிமுருகன், காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன், வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
ரயிலில்அடிபட்டு, வாலிபர் பலி!
திண்டுக்கல் அம்பாத்துரை ஜாதிகவுண்டன்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு சின்னாளபட்டியைச் சேர்ந்த நவீன் (21) ,என்பவர் பலி.காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை உடைத்து கொள்ளை, வாலிபருக்கு சிறை!
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே மகாத்மா நகரில் பேராசிரியர் சசிகுமார் என்பவர் வீட்டை கடந்த (27/1/2021), உடைத்து 3.1/2 பவுன் கொள்ளையடித்தது சம்பந்தமாக தாலுகா காவல்துறையினர், வழக்கு பதிவு செய்திருந்தனர். மேற்படி சம்பவம் குறித்து எஸ்.பி.திரு.பாஸ்கரன், உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி திரு.அருண் கபிலன், மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.கஜேந்திரன், சார்பு ஆய்வாளர் திரு.விஜய், தலைமையிலான போலீசார் தோமையார்புரம் பகுதியில் வாகன சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த விஷ்ணுகுமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மகாத்மா நகரில் வீட்டை உடைத்துக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து விஷ்ணுகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 3.1/2 பறிமுதல் செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறிய வயதில் திருமணம், வாலிபருக்கு போக்சோ!
திண்டுக்கல், சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த ராஜா (35), என்பவர் கடந்த வருடம் (17), வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பிணியான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது வயதை சரிபார்த்தபோது மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜான்சன்ஜெயக்குமார், மகளிர் ஆய்வாளர் திருமதி.திலகா, ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
