கஞ்சா விற்பனை, 2 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியில், கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நகர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியன், தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சக்திவேல், காவலர்கள் திரு.ராஜேந்திரன், திரு.தர்மராஜ், திரு.ஆதி, திரு.ஜோசப், ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது கஞ்சா விற்பனை செய்த வேளாங்கண்ணி (55), ஆரோக்கியம்(30), ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
வீட்டை உடைத்து, கொள்ளை!
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே மகாத்மா நகரில், பேராசிரியர் சசிகுமார் என்பவர் வீட்டை கடந்த (27/1/2021), அன்று உடைத்து 3.1/2 பவுன் கொள்ளையடித்தது சம்பந்தமாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேற்படி சம்பவம் குறித்து எஸ்.பி. திரு.பாஸ்கரன், உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி திரு.அருண் கபிலன், மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் திரு. கஜேந்திரன் சார்பு ஆய்வாளர் திரு.விஜய், தலைமையிலான போலீசார் தோமையார்புரம் பகுதியில் வாகன சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த விஷ்ணுகுமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மகாத்மா நகரில் வீட்டை உடைத்துக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து விஷ்ணுகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 3.1/2 பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொந்தரவு, ஐந்து பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பெண்கள் விடுதியில் தங்கியுள்ள பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராகுல், பரந்தாமன், கிருபாகரன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.
விடுதியில் உள்ள மாணவிகளுக்கு தொல்லை, தீவிர விசாரணை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் ரோட்டில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதியில் உள்ள மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த குற்றச்சாட்டு உறுதியானதாக தகவல் வெளியானதால் தற்போது காவல்துறையினரும் மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
