காரை திருடி வந்த வாலிபர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரையும், காருக்குள் இருந்த வாலிபரையும் பிடித்து விசாரணை செய்ததில் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
அங்கிருந்த பதிவு செய்யப்படாத புதிய மாருதி காரை திருடி அதை விற்பதற்காக கொடைக்கானல் எடுத்து வந்தார். கொடைக்கானலுக்கு செல்ல வழி தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்றார். காக்காதோப்பு பிரிவில் கார் வந்தபோது பெட்ரோல்ல் இல்லாமல் நின்றுவிட்டது. என தெரிய வந்தது, இதையடுத்து கார் உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வேடசந்தூர் காவல்துறையினர் விஜய் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொழிலாளி போக்சோவில் கைது!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி ஆண்டிசாமியை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.திலகா, சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார் அவர்களது தலைமையிலான காவல்துறையினர், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லட்சகணக்கில் மோசடி, 2 பேருக்கு சிறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த நித்தின் குமார் என்பவருக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி கரூர் மணமங்கலத்தை சேர்ந்த நவீன் (32), வெங்கடேசன் (34), ஆகிய 2 பேர் ரூ.7 லட்சம் பெற்று கொண்டு போலியான உத்தரவு கொடுத்து ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் திரு.ராஜகோபால், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.அய்யனார், திரு.பிரகாஷ், மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து நவீன், வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மான் கொம்புகள் விற்பனை, செய்தவருக்கு அபராதம்!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை அடுத்த பன்றிமலையை சேர்ந்த இருதயராஜ் (36), என்பவர் வீட்டில் மான் கொம்புகள் விற்பனைக்கு வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சோதனை நடத்தி 4 மான் கொம்புகளை பறிமுதல் செய்து இருதயராஜாவுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புதிய வகை மோசடி, திண்டுக்கல் காவல்துறையினரின் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வகை மோசடியாக 4 ஜி சிம் வைத்திருப்பவர்களுக்கு 5 ஜி சிம் செல்போன் மூலம் அப்டேட் செய்து தருவதாக கூறி OTP – யை பெற்று கொண்டு அவர்கள் புது சிம் வாங்கி கொண்டு தங்களது நமது தகவல்கள் மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தினை நூதன முறையில் திருடி மோசடி செய்கிறார்கள் ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
குளத்தில் இறங்கி, வாலிபர் தற்கொலை!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு- பெரியகுளம் சாலையில் வீரன் குளம் கண்மாயில் பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் டாட்டா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு, அவர் யார் என காவல்துறையினர் விசாரணை.
