போக்சோவில், வாலிபர் கைது!
திண்டுக்கல் : கோட்டை அருகே புதுப்பட்டியை சேர்ந்த (16), வயது பெண்ணை அதே ஊரை சேர்ந்த சின்னத்துரை (22), என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சின்னதுரையை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
மருந்து சாப்பிட்டு தற்கொலை!
திண்டுக்கல் ரயில் நிலையம் கிழக்கு பகுதி ஆஞ்சநேயர் கோயில் அருகே அடையாளம் தெரியாத சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நகர் வடக்கு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
பேருந்து விபத்தில், வாலிபர் பலி!
திண்டுக்கல் செம்பட்டி அருகே ஆதிலட்சுமிபுரத்தில், மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கில், குற்றவாளிகைது!
திண்டுக்கல் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர், கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியை, தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 2021 செப்டம்பர் மாதம் 11 பேரை கைது செய்து திருச்சி மற்றும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் 11 பேரும் சுமார் 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். இந்த நிலையில் இந்த 11 பேரும் பிணையில் வெளியே வந்துள்ளனர்.
