போதை காளான்விற்பணை, 4 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வைரவேல் ( 32), லட்சுமணன் (38), மதன் (24), குணசேகரன் (52) ஆகிய 4 பேர் மீதுகாவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் 4 பேரும் கைதாவதற்கு 2 நாட்களுக்கு முன் தாசில்தாரிடம் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று பிணைய பத்திரம் வழங்கினர். இந்நிலையில் நன்னடத்தை பிணையப்பத்திரத்தை மீறி நடந்ததால் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் உத்தரவின்படி, 4 பேருக்கும் 6 மாதம் ஜாமீனில் வெளிவராத படி முதன் முறையாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வாலிபர் மீது போக்சோ!
