திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், கண்டக்டரின் ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த கண்டக்டர் செந்தில்முருகன், நகர் வடக்கு காவல், நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர் அங்கு உள்ள சிசிடிவி, காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
————————————-
மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி ,சேர்ந்த சண்முகம் (33), என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குபோட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
——————————-
பெருமாள்புதூர், கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (48), என்பவர் தொடர்ந்து அப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை , பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பழனி நகர, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, அவர்களது தலைமையிலான, காவல்துறையினர் அய்யனாரை, கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
