திண்டுக்கல் : திண்டுக்கல் நகர்ப்பகுதிகளில் சில நாட்களாக இருசக்கர வாகன தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இதையடுத்து திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள், சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார், குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.நல்லதம்பி, திரு.வீரபாண்டி, தலைமை காவலர்கள் திரு.ஜார்ஜ் எட்வர்ட், திரு.முகமது அலி, திரு.ராதாகிருஷ்ணன், முதல் நிலை காவலர் திரு.விசுவாசம் ஜெயராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அபினேஷ் குமார்(29), லோகுகுமார்(21), விக்னேஷ்(19), தமிழரசன்(19) ஆகிய 4 நபர்கள் என தெரியவந்தது இதையடுத்து 4 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
