திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று 08.02.2020 -ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.சண்முக ராஜேஸ்வரன் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மேற்பார்வையில் தைப்பூசத் திருவிழாவிற்கு 4000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக 54 இடங்களில் காவல் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கோவிலின் மேல் பகுதியிலும், கோவிலை சுற்றியும் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அன்னியர்கள் நடமாட்டத்தை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மெகா போன்கள் மூலம் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பக்தர்கள் குழு குழுவாக பிரித்து மலை மேல் அனுப்பப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் காவல் துறையின் அவசர அழைப்பு எண்கள் பதிவிடபட்டுள்ளது. தைப்பூசத் திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்திட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா