திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் உத்தரவின்பேரில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.