திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஊரடங்கு உத்தரவை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபுதல்கா,ஜான்சன்ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு அபராதம் விதித்து 380 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். அப்போது போலீசார் கூறியதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளில் நிரம்பி வழிகிறது.
ஆகவே அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் , மற்றவர்களையும் காப்பாற்றுங்கள் என அறிவுறுத்தினர். இந்நிலையில் வாகன சோதனை தீவிரப்படுத்துமாறு எஸ்.பி. ரவளி பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா