திண்டுக்கல்: திண்டுக்கல் அம்பாத்துரை போலீசார் அதிரடி சோதனை 2000 கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் தாலுகா தொப்பம் பட்டியில் இருந்து ஒரு லாரி வேகமாக சென்றது. இதை இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், எஸ்.ஐ பரமேஸ்வரன்,தனிபிரிவு போலீசார் ராஜா,பீட் போலீசார் சதீஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். மினி லாரியில் கடத்தல் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஸ் குமார் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிறுநாயக்கன்பட்டி சேர்ந்த கஸ்பர் ஆரோக்கியம் 23 , திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிவா,25, ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் அரிசி,மினி லாரியுடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அப்பாதுரை போலீசார் ஒப்படைத்தனர்.
