திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முக்கிய வீதிகளான மெயின் ரோடு, பழனி ரோடு, தாடிக்கொம்பு ரோடு பகுதிகள் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, 4 ரத வீதிகள் ஆகிய முக்கிய பகுதிகள் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப் படுத்தும் விதத்தில் அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் போக்குவரத்து ஏதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கை மீறுபவர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும்வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் நகர் தாலுகா எல்லைக்குட்பட்ட பழனி சாலையில் தாடிக்கொம்பு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முகமது காதர் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் மற்றும் நகர் போக்குவரத்து காவல் துறையினர் முழு ஊரடங்கு காலங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ஈ சேவைகள் மூலம் அபதார தொகையும் பெறப்பட்டுள்ளது.