திண்டுக்கல் : திண்டுக்கல் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தின் 60-ம் ஆண்டு நிறைவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய ஒற்றுமை, என்.சி.சி. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சாலை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஹைதராபாத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 23-ந்தேதி மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவவீரர்கள் தொடங்கினர். ராணுவ அதிகாரிகள் நாயர், பவான் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் ராணுவ வீரர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதிக்கு வந்தனர்.
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே சோதனைச்சாவடியில் ராணுவவீரர்களுக்கு போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முக லட்சுமி, மற்றும் போலீசார் பங்கேற்றனர். ராணுவ வீரர்களுக்கு பிஸ்கட், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களை வழங்கி போலீசார் உற்சாகப்படுத்தினர். போலீசாரின் திடீர் வரவேற்பால் ராணுவவீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா