திண்டுக்கல் : முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி ,வளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ரூ.54 கோடி மதிப்பிலான 170 புதிய திட்ட பணிகளுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவுபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ,நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
வருகை தரும் தமிழக முதல்வர் திரு.முக.ஸ்டாலின், அவர்களது வருகைகாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக, வந்து தமது பாதுகாப்பு பணியில் எவ்வித தொய்வுமின்றி திறம்பட கடும் வெயிலில், சாலைகளில் வரும் வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
