திண்டுக்கல் : (05.05.2022), தமிழக அரசின் ஆணைப் படி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு, அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் படி திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல், ஆயுதப்படை, மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து, 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை, மற்றும் காவல்துறை, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத, பெண்கள் உட்பட 81 தலைமை காவலர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்றனர்.
இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற, சிறப்பு சார்பு ஆய்வாளர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, பணியில் திறன்பட செயல்பட, வேண்டுமென அறிவுறுத்தினார்கள். உடன் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன், அவர்கள் மற்றும் நகர் உட்கோட்ட, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன், அவர்கள் இருந்தார்கள்.
