திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குஅனுப்பப்பட்டனர்.
மேலும் இவர்களது நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு முக்கியகுற்றவாளிகளான சாமியார்பட்டியை சேர்ந்த 1. மன்மதன், 2. அரவிந்த குமார், 3. மதுரையை சேர்ந்த சக்திவேல் மற்றும் 4. சிவகங்கையை சேர்ந்த சரவணன் ஆகியோரை எஸ்பி.திரு.ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா