திண்டுக்கல்: மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுபாட்டில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் சிறுமலை, கொடைக்கானல், தாண்டிக்குடி, கரந்தமலை உட்பட பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. போலீசார் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று சீலப்பாடி ஓம்சக்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற கன்னிவாடி மணியக்காரன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிமிருந்து 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா