திண்டுக்கல் : திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த மாதம் 16-ம் தேதி பூரணசந்திரன் (64), என்பவரிடம் பணம் எடுத்து தருவது போல ஏமாற்றி ரூ.40,000 திருடி சென்றது சம்பந்தமாக நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து எஸ்.பி. திரு .பாஸ்கரன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி. திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு .உலகநாதன் தலைமையில் நகர் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எஸ்.எஸ்.ஐ திரு .வீரபாண்டியன், காவலர்கள் திரு.ஜார்ஜ், ராதா, திரு .முகமது அலி, திரு .விசுவாசம், திரு .சக்திவேல், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கரூரில் பதுங்கி இருந்த கதிரேசன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000 பணத்தை மீட்டு குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
