திண்டுக்கல் : ஆந்திராவிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை பிரிவு போலீசார் காரில் கடத்தி வரப்பட்ட 200கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சீலப்பாடி பிரிவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாராலால் 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சோலைமுத்து, பரணி, யுவராஜ், ராகவன், பாண்டியராஜன், ஜெயச்சந்திரன் ஆகிய 7பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா