திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா நோய் தொற்றினால் 17.06.2020 அன்று உயிர் நீத்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் 18.06.2020 இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் குமரன் பூங்கா அருகில் சீன எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணமடைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏந்தி,2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பாராளுமன்ற அமைப்பினர், முன்னாள் ராணுவத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா