திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கடைவீதி பகுதிகளுக்கு வந்து செல்ல 12.11.20 ம் தேதி முதல் மூன்று , நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பெரியார்சிலை முதல் மணிக்கூண்டு வரையும் , மணிக்கூண்டு முதல் தங்கம் லாட்ஜ் சந்திப்பு வரையும் , மணிக்கூண்டு முதல் MP கோவில் வரையும் , மணிக்கூண்டு முதல் ஈஸ்வரி லாட்ஜ் சந்திப்பு வரையிலும் உள்ளே வர தடை செய்யப்பட்டுள்ளது . மேற்படி வழிகளில் 13.11.20 ம் தேதி முற்றிலுமாக அனைத்து வாகனங்களும் உள்ளே வர தடை செய்யப்பட்டுள்ளது . வீதிக்கு பொருட்கள் வாங்க செல்பவர்கள் தங்கள் இரு சக்கர மற்றும் , நான்கு சக்கர வாகனங்களை டட்லி மேல்நிலைப்பள்ளி மேற்கு வாயில் வழியாக உள்ளே உள்ள மைதானத்திலும் , PWD Jn . , முதல் தலப்பாகட்டி பிரியாணி கடை வரை உள்ள சாலையின் ஓரங்களிலும் நிறுத்திக் கொள்ளலாம் . பொது மக்கள் நலனுக்காக இந்த அறிவிப்பு காவல்துறை மூலமாக தெரியப்படுத்தப்படுகிறது.