திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிகொம்பு காவல் நிலையத்தில் நேற்று வாகன ரோந்து பணியின் போது, தாடிகொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன் பட்டி என்னும் கிராமத்தில், சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை அப்பகுதியை சேர்ந்த ஆனந்தன் வயது 45 என்பவர் விற்பதாக கிடைத்த தகவலின் படி, தாடிகொம்பு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் பவுல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்களுடைய தலைமையிலான காவலர்கள் குழு விரைந்து சென்று ஆனந்தன் என்பவரை கையும், களவுமாக பிடித்து அவரிடமிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து குற்ற எண்:567/19 கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா