திண்டுக்கல் : மக்கள் பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு போலீஸ் நீயூஸ் பிளஸ் நிர்வாகிகள் சமூகப் பணிகளை இரவு பகலாக செய்து வருகின்றனர். இன்றைய சூழலில் முதல் தரமான முக கவசம் கிடைப்பது கடினமான நிலையாக உள்ளது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.அழகுராஜா முக கவசங்களை காவல்துறையினருக்கு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் முக்கிய பகுதிகளில் கொரானா மற்றும் 144 சட்ட ஊரடங்கு பாதுகாப்பு பணியில் நகர் காவல்துறை இருபால் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, இரண்டு கட்டங்களாக, கொரானா விழிப்புணர்வுக்காக முககவசம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நீயூஸ் பிளஸ் சார்பாக வழங்க பட்டது.