விழுப்புரம் : திண்டிவனம்,ரோஷணை காவல் உதவி ஆய்வானர் திரு. ராஜேஷ் மற்றும் காவல்துறையினர், சலவாதி மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் மறித்து சோதனை நடத்தினர். அதில் 36 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜானகிராமன் (31), என்பதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜானகிராமனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.