விழுப்புரம் : விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள தனியார் மனைப்பிரிவில் பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (32), என்பவர் தனது நண்பர்களான வசந்தபுரத்தை சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (34), அவரப்பாக்கம் சக்தி தாஸ் (28), செஞ்சி ரோடு பகுதியை யுவராஜ் (23) ஆகியோருடன் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது ஜெகதீசனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், சக்திதாஸ், யுவராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கழியால் ஜெகதீசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தினேஷ்குமார் மீது ரோஷணை போலீஸ் நிலையத்தில் 3 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.