திருவள்ளூர்: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் சரக்கு ஏற்றும் பகுதியில் அதிக உயரம் வைத்துக்கொண்டு சரக்குகளை விதிகளுக்கு புறம்பாக அதிகமாக ஏற்றுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.சு.மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.கா.பன்னீர்செல்வம் மற்றும் திரு.கோ.மோகன் ஆகியோர் திருவள்ளூர் பகுதியில் திடீர் வாகன தணிக்கை செய்தனர்.
தணிக்கையின் போது டிப்பர் வாகனங்களில் சரக்கு ஏற்றும் பகுதியில் அதிக உயரம் உள்ள வாகனங்களை கண்டறிந்து அந்த ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் உடனடியாக அப்பகுதி வெட்டி எடுத்துவிட்டு வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
அச்சமயம் அதிக பாரம் ஏற்றி அந்த வழியாக வந்த இரண்டு சரக்கு வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தார்கள்.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கா.பன்னீர்செல்வம் கூறுகையில் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு அதிகமாக பாரம் ஏற்றுவதால் நிலைத்தன்மை இழந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அதேபோல் அதிக பாரம் இருப்பதால் பிரேக் எபிஸியன்சி வெகுவாக குறைந்து பெரும் மோதல்கள் ஏற்பட்டு உயிர் பலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஓரிரு நாட்களில் டிப்பர் லாரிகளில் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிக உயர் ரீப்பர்களை எடுத்துவிட்டு பதிவு செய்யும்போது என்ன உயரம் இருந்ததோ அதன்படி வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை