திருவள்ளூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் வழிபாட்டு தலங்களுக்கு சென்ற மக்கள் மாலையில் நீர்நிலைகளுக்கு படையெடுத்தனர். கொசஸ்தலை ஆற்றின் இறுதி தடுப்பணையாக சீமாவரம் கிராமத்தில் உள்ள சீமாவரம் தடுப்பணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தடுப்பணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் குளித்தும், சிறுவர்கள் மேலிருந்து குதித்தும் குதூகலமடைந்தனர். தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் நீச்சலடித்தும், குளித்தும் பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் நீர் நிலைகளில் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், அரையாண்டு தேர்வு விடுமுறையின் இறுதி நாள் என்பதால் நீர்நிலைகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு