திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.04.2024) அன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்து சென்று நபர்களை கைது செய்ய நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணகுமார் அவர்களின் மேற்பார்வையில், வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதாராணி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி, தனிப்படையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்ததிலிருந்தும் தாலி சங்கிலியை பறித்து சென்றது – தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மதன் மற்றும் ராஜேஷ் என்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி நபர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடரந்து விசாரணை செய்தும், அவர்களிடமிருந்து தாலி சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணகுமார், வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதாராணி, Crime Team உதவி ஆய்வாளர் திரு.கோபிநாத், Cyber Crime உதவி ஆய்வாளர் திரு.கணபதி, பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ரூபன் மற்றும் காவலர்கள் திரு.மனோகரன், திரு.அய்யனார், திரு.செந்தில்குமார், தனிப்பிரிவு காவலர் திரு.அறிவழகன், திரு.மதன்குமார், திரு.ஜான், திரு.எழிலரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.