ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ரயில்வே காலனி பகுதியில் நேற்று (07.12.2021) வீட்டிற்குள் தாய்-மகள் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது தொடர்பாக மண்டபம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ்.IPS., அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திருமதி.ஜீவரத்தினம், திரு.ஆடிவேல் சார்பு ஆய்வாளர்கள் திரு.கோட்டைச்சாமி, திரு.முருகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை மற்றும் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவினர் ஆகியோர், இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.