மதுரை: கோச்சடை வேலன்மாய் தெருவை சேர்ந்தவர் பரனிதரன் மகள் ஜெயபாரதி (21) இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்ததிலிருந்து ஜெயபாரதி, மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய உறவினர் அமுதா எஸ் . எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயபாரதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி
.