சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) அவர்கள் நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பல்லாண்டு வாழ்க அந்தப்படத்தில் அவர் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல் நல்ல கருத்துள்ள பாடல்,
கடவுளிடம் கருணை தனை காணலாம், அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்.
நல்ல மனசாட்சியே, தேவன் அரசாட்சியாம்,
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியம்.
ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.
இந்தப் பாடலிலே அருமையான அற்புதமான ஒரு வரி உண்டு.
கடவுளிடம் கருணை தனை காணலாம், அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் என்ற வரிகளுக்கு ஏற்ப போலீஸ் நியூஸ் பிளஸ் நடுத்தர வாசிகளுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்றாடம் தரமான ருசியான, உணவு ஊரடங்கு நாட்களில் மட்டுமல்லாது, கடந்த பல வருடங்களாக வழங்கி வருகிறது.
கொரோனா நோய் பரவுதல் இந்தியாவில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும் சென்னை பெருநகர தூய்மை பணியாளர்களுக்கும், சாலையோர மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட ப்பட்டது. தென் சென்னையின் பல பகுதிகளிலும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நடைபெற்றது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களால், திங்கட்கிழமை (29.06.2020) அன்று சாலிகிராமம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. வீடு வீடாக சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் 2000 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம். பிராத்தனை செய்ய முடியவில்லையா அதற்குப் பதிலாக சேவை செய்யுங்கள், கடவுள் உங்கள் அருகே வருவார். அன்னை தெரேசாவின் பொன்மொழிகளின்படி, வாழ்ந்து வரும் சென்னை மாவட்ட செயலாளர் திரு. முகமது மூசா அவர்கள் சேவை பாராட்டுக்குரியது.