கோவை : கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் மணி இவர் அருகிலுள்ள இடும்பன் கோவில் நேற்று தமிழ் வாசித்துக்கொண்டிருந்தார் அப்போது செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சகாபுதீன் என்பவரின் மகன் ஹரீப் (31) என்பவர் அங்கு வந்து தவில் வாசிப்பது தனக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார் .தொடர்ந்து தவில் வாசித்த மணியிடம் தகராறு செய்ததோடு கைகளால் தாக்கத் தொடங்கினார். இதையடுத்து மணி செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஹரீப்பை கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்