கன்னியாகுமரி: குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் திரு.ரா. விக்னேஸ்வரன் என்பவர் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் காவலரின் இச்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ.பத்ரிநாராயணன் I.P.S அவர்கள் வெகுவாக பாராட்டினார்.














