திருவள்ளூர் : தவறு இழைத்த போலீசார் மீது நடவடிக்கைஇ பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் வழங்கிய திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களின் செயல் திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. நீதி என்பது அனைவருக்கும் சமம். அது காவலராக இருந்தாலும், பொதுமக்களில் ஒருவராக இருந்தாலும், சம நீதி வழங்கி திருவள்ளூர் மாவட்டத்தின் மனுநீதியாக உயர்ந்துள்ளார் திரு.அரவிந்தன் அவர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், வழக்கமான வாகன சோதனையில், ஈடுபட்டிருந்த வெங்கல் காவல் நிலைய காவலர்கள், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில், காய்கறி எடுத்து வந்த திரு.கார்த்திக் என்பவரை நிறுத்தி சோதனை செய்து வைரஸ் தொற்று தொடர்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுரை கூறி அவரை காத்திருக்க வைத்துவிட்டு, வேறு வேலைக்கு காவல் ஆய்வாளர் சென்று விட்ட காரணத்தால், தான் கொண்டுவந்த காய்கறிகளை, அவ்வழியாக வந்த காவல்துறை வாகனத்தை மறித்து கொட்டியதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இத்தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க, இச்சம்பவத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அகரம் கண்டிகையில் உள்ள திரு.கார்த்திக் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, இழப்பை ஈடுகட்டும் விதமாக காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்கள் பாதிப்புக்கு உள்ளான விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடும் வழங்கி உள்ளார். தவறு இழைத்த போலீசார் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அறித்த பொதுமக்கள் விரைவாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களை பாராட்டி வருகின்றனர்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். வாழ்க காவல்துறை ! வளர்க காவலர்கள் !
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்