சேலம்: சேலம் மாநகரம், ஆண்டி கவுண்டர் காலனி, நெத்திமேடு மோகன் என்பவரின் மகன், திரு.தினேஷ்குமார் 27. என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கைப்பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற ரூ.1, 00,000/- ஐ, சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடேஸ்வரி கல்லூரி அருகே செல்லும்போது.
தவற விட்ட பணத்தை, சேலம் தாசநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த திரு.அப்துல்லா பாஷா என்பவரின் மகன் திரு.அப்துல் ரகுமான் மற்றும் சேலம் அன்னதானப்பட்டி, அகரம் காலனியைச் சேர்ந்த திரு.பன்னீர்செல்வம் என்பவரின் மகன், திரு.சதீஷ்குமார் ஆகியோர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தை அணுகி மேற்படி நபர் தவறவிட்ட ரூபாய் ஒரு லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த செய்தியறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்கள் இன்று 16.09.2021 ஆம் தேதி நேரில் வரவழைத்து கௌரவித்தார்.